செவ்வாய், 3 ஜனவரி, 2012

றெயூனியன் தீவுத் தமிழர்களின் புத்தாண்டுப் பெருவிழா !


உலகத் தமிழர்களின் ஒரு பகுதியாக பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட றெயூனியன் தீவுத்  தமிழர்கள் புத்தாண்டுப் பெருவிழாவை வழமைபோல் ‘காளிப் பெருவிழாவாக’ கொண்டாடியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டின் முதல் நாளில் உள்ள காளி கோவில் கூடுகின்ற றெயூனியின் தீவுத் தமிழர்கள் கோழி ஆடு ஆகியன காளிக்கு பலிகொடுத்து படையிலிட்டு வணங்குவது இவர்களின் பண்பாட்டு மரபாக உள்ளது.
இதேவேளை இந்நாளில் தீமிதிப்பு நிகழ்வும் இத்தீவத் தமிழர்களால் சிறப்பாக முன்னெடுக்கபடுகின்றது.

பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் கரும்பு தோட்டங்களுக்காக இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களே இன்று றெயூனியன் தீவின் முதன்மைக் குடிகளாக உள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானோர் தமிழர் பெயர்களை கொண்டிருந்தாலும் பிரென்சு மொழி பேசுகின்றவர்களாக உள்ளனர்.
இத்தகைய சமய வழிபாட்டுகள் ஊடாக தங்களின் தமிழ் அடையாளங்களை இவர்கள் காத்துவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
( நாதம் செய்திகளுக்காக கோபுரசாமி பத்திறிஸ் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக