வியாழன், 21 ஜனவரி, 2010

தஞ்சை பெரிய கோயில் 1000வது ஆண்டு விழா இன்று துவக்கம்

தஞ்சை பெரிய கோயில் 1000வது ஆண்டு விழா இன்று துவக்கம்


[ வியாழக்கிழமை, 21 சனவரி 2010, 06:33.15 AM GMT +05:30 ]



தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனால், பிரகதீஸ்வரர் ஆலயம் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் இக்கோயில், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் ஆயிரமாவது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதுபற்றி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியமாபா பத்ரிநாத் தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



இதையொட்டி, இந்திய தொல்லியல் துறை சார்பில் தஞ்சையிலுள்ள தென்னக பண்பாட்டு மையத்தில் பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு வரலாறு பற்றிய சிறப்பு கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன.



இதன் தொடக்க விழா தென்னக பண்பாட்டு மையத்தில் 21ம் தேதி நடக்கிறது. விழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைக்கிறார்.



தொல்லியத்துறை இணை இயக்குநர் போனஷா தலைமை வகிக்கிறார். கலெக்டர் சண்முகம் சிறப்புரையாற்றுகிறார். விழா 2 நாட்கள் நடக்கிறது. மேலும், தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மாலை நேரத்தில் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக