வெள்ளி, 15 ஜனவரி, 2010

மலேசியத் தமிழர்கள்

மலேசியத் தமிழர்கள்


ஜனவரி 7, 2010 yatrigan ஆல்


மலேசியத் தமிழர்கள்

6ம் நூற்றாண்டில் துவங்கியது தமிழ் நாட்டிற்கும்

மலேசியாவிற்குமான உறவு.

தொடர்ந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு தமிழ்ப்

பரம்பரையினரான மன்னன் விஜயன் சந்ததியினர்

மலேசியாவை ஆண்டனர்.

10 மற்றும் 11ம் நூற்றாண்டுகளில் சோழ மன்னன்

ராஜராஜனும் பின்னர் அவர் மகன் ராஜேந்திர சோழனும்

மலேசிய மண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு

வந்தனர். இந்து மதமும் பௌத்த மதமும் செழித்திருந்தன.

15ம் நூற்றாண்டிற்குப் பிறகு சுல்தான்களில் இஸ்லாமிய

ஆட்சி ஏற்பட்டதைத்தொடர்ந்து பெரும்பாலான மக்கள்

இஸ்லாம் மதத்தைப் பின்பற்றலாயினர்.

பின்னர் ஐரோப்பியரின் ஆதிக்கம். முதலில் டச்சுக்காரர்கள்.

பின்னர் பிரிட்டிஷார்.2ம் உலகப்போரின்போது 4வருடங்கள்

ஜப்பானியர். மீண்டும் பிரிட்டிஷார்.


1957ல் சுதந்திரம். 1963 முதல் தற்போதைய நிலை.

6ம் நூற்றாண்டிலேயிருந்தே மலேசியாவில் தமிழர்

வசித்து வந்தாலும் அதிக எண்ணிக்கையில்

தமிழ் நாட்டிலிருந்து தமிழர் குடிபெயர்ந்தது 19ம் நூற்றாண்டில்

பிரிட்டிஷ் ஆட்சியின் போதுதான்.


தற்போது மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை

ஏறக்குறைய 18 லட்சம். இது மலேசியாவின் மொத்த

மக்கள் தொகையில் 7.2 சதவீதம். டாக்டர்கள், வக்கீல்கள்,

ஆசிரியர்கள், ஆடிட்டர்கள், தொழில் முனைவோர், உழைக்கும்

தொழிலாளிகள் என்று சமுதாயத்தின் பல மட்டங்களிலும்

தமிழர்கள் நிரவி இருக்கின்றனர். தமிழ் மொழி,பண்பாடு,

பழக்க வழக்கங்களைப் பேணிக்காப்பதில் பெரும் ஆர்வம்

கொண்டு வாழ்கின்றனர்.


மலேசியாவின் விசித்திரமான அரசியல் சட்டம் காரணமாக

மலேசியத் தமிழர்கள் இன்று மகிழ்ச்சியாக இல்லை.

கட்டுப்படுத்தப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட மொழி, இன மற்றும்

மத கலாச்சாரங்கள் அவர்களின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டு

போய் விட்டது.


தங்கள் உரிமைக்காகப் போராடும் மலேசியத்தமிழர்கள்

தங்கள் போராட்டத்தில் வெற்றியும் அதன் மூலம் வாழ்வில்

மகிழ்ச்சியும் பெறும் நாள் விரைவில் வர வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக