செவ்வாய், 27 டிசம்பர், 2011

திருநள்ளாறில் வீழ்ந்து வணங்கிய நாசா விஞ்ஞானிகள்.

திருநள்ளாறில் வீழ்ந்து வணங்கிய நாசா விஞ்ஞானிகள்.

(தொகுப்பு –  ஈழம் பிரஸ்) கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு உச்ச சனியாக பெயர்ச்சி அடையும் சனி பகவான் பல மாற்றங்களைத் தனி மனிதர் வாழ்விலும் உலகிலும் கொண்டு வரப் போகிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 15,2011ல் சனிபகவான் மேற்சொன்னபடி பெயர்ச்சி அடைந்து விட்டார்.
யாழ்ப்பாணத்து அராலியில் 1649ம் ஆண்டு பிறந்த இராமலிங்க முனிவர் தனது 18 வயதில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தை கணித்து 1667ல் வெளியிட்டார். இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடையில் சனி பெயர்ச்சி வித்தியாசம் 36 நாட்கள் மாத்திரமே. பலன்கள் ஏறக்குறைய ஒன்றுதான்.
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 21, 2011ல் சனீஸ்வரர் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு உச்ச சனியாகப் பெயர்ச்சி அடைகிறார். சனீஸ்வரருக்குத் தனிக் கோயில் அமைந்துள்ள திருநள்ளாறில் விசேட வழிபாடுகள் நடக்கின்றன. ஒன்பது கிரகங்களில் பலம் வாய்ந்தவரான சனி, பகவான் என்றும் ஈஸ்வரன் என்றும் சிறப்பிக்கப்டுகிறார்.
சனியைப் போல் கெடுப்பானும் இல்லை கொடுப்பானும் இல்லை என்பார்கள். மனிதப் பிறவிகள் அனைவரும் சனியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். சோதிடர்கள் பொய்யாகலாம் சோதிடம் பொய்ப்பதில்லை. அது கணிதத்தின் அடிப்படையிலான கலை. கணித மேதைகளுக்கு சோதிடம் தற்செய்யும். ஆனால் தொழிலாகக் கொள்ளக் கூடாது. அது பற்றி அதிகம் பேசவும் கூடாது.
அமெரிக்க செய்மதிகளுக்கும் விண்வெளி நிர்வாகத்திற்கும் பொறுப்பான நாசா (National Aeronautics And Space Adimnistration – Nasa) விஞ்ஞானிகள் தாம் ஏவிய செய்மதிகள் திருநள்ளாறு திருக்கோவிலுக்கு மேலால் விண்ணில் பறக்கும் போது ஒரு நொடிப் பொழுது நிறுத்திப் பறப்பதை அவதானித்தனர்.
இதற்கு விஞ்ஞான விளக்கம் இல்லை. இந்த அதியசம் நடக்கும் இடத்தை அவர்கள் பார்ப்பதற்கு திருநள்ளாறு கோவிலுக்கு வந்தனர். செய்மதிகள் ஒரு நொடி நிறுத்திப் பறந்த இடம் சரியாகக் கோவிலுக்கு நேர் மேலாக என்பதை உறுதி செய்தனர். சனி பகவானை வீழ்ந்து வணங்கிவிட்டு நாடு திரும்பினார்கள்.
மேற்கூறிய செய்தியை நாசா பதிவேடுகளில் பார்க்கலாம். சனி பகவானின் இழுவை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு இது உதாரணம்;. எப்போதும் பன்னிரண்டு ராசிகளில் ஒன்றில் இரண்டரை ஆண்டுகள் அமர்ந்திருந்து ஆட்சி செய்யும் சனிஸ்வரர் உச்ச சனிப் பெயர்ச்சியில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்வார்.
இந்த மூன்று ஆண்டுகளுக்குள் சனி மூன்று தடவை வக்கிரமாகித் தன்னை விடுவிடுத்துக் கொள்கிறார். இரண்டு முறை வியாழன் பெயர்ச்சியாகி சனியுடன் இணைகிறார். ராகு கேதுக்கள் ஒரு முறை பெயர்ச்சி கண்டு சனியும் ராகுவும் துலா ராசியில் அமர்ந்து உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்ப் போகின்றன.
துலா ராசியில் அமர்ந்த சனியும் ராகுவும் பல கெடுபலன்களையும், புவியில் நிலநடுக்கம், பேரலை, கடல்கோள் பெரும் உயிரிழப்பு என்பனவற்றை ஏற்படுத்தப் போகின்றன. உலக அரசியலில் பல தீடிர் மாற்றங்கள் ஏற்படும். இந்திய இலங்கை அரசியலிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இன்னுமொரு பேரழிவுக்கு 04.02.2014 – 11.03.2014 வரையான 35 நாட்களில் சனி, ராகு, செவ்வாய், இணைந்து கடல், பூமி ஆகாயம் ஆகியவற்றில் அதிபயங்கர மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன. உலக நாடுகள் பலவற்றில் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுப் பலன்கள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. அவரவர்களின் பிறந்த நேர, திசாபுத்தி பலன்களுக்குத் தகுந்தபடி கோட்சாரப் பொதுப் பலன்கள் இணைந்த தனி மனிதர் பலன்கள் மாறுபடும. நாழிதள்களில் நாட்பலன் பார்ப்போர் இதைக் கவனிக்க வேண்டும்.
சனிப் பெயர்ச்சியால் சாதக பாதக விளைவுகளைப் பெறும் ராசிக்கார்கள்.
இந்தப் பெயர்ச்சியால் பயங்கரமான பிரச்சனைகளை ஏற்படுத்திய ஏழரைச் சனி முற்றிலும் விலகி யோகமான பலன்களை பெறப்போகும் சிம்ம ராசிக்கார்கள் மிகச் சாதகமான காலத்தை எதிர்பார்க்கலாம்.
அடுத்த படியாக மிதுனம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்கார்கள் தொழில் வாய்ப்பு, வருமான உயர்வு, மதிப்பு மரியாதை அதிகரிப்பு ஆகியவற்றைப் பெற வாய்ப்பு உண்டு.
புதிதாக ஏழரைச் சனியின் பிடியில் வரும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது விரயச் சனியாகும். கடின தசையை எதிர்நோக்குகிறார்கள்.கன்னி ராசிக்கார்கள் கடந்த நாலரை வருடமாகச் பாதகச் சனியின் பிடியில் இருந்தார்கள். இனிமேல் கடன் தொல்லை, அவமானம், குடும்பப் பிரிவு ஏற்பட வாய்ப்பில்லை. அடுத்துவரும் மூன்று வருடங்களில் கன்னிராசிக்கார்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
கடந்த இரண்டே கால் ஆண்டுகளாக ஏழரைச் சனியில் இருந்த துலா ராசிக்கார்கள் அடுத்துவரும் மூன்று ஆண்டுகாலம் ஜென்ம சனிப் பலனை அனுபவிப்பார்கள். கவனமெடுத்து விரும்பி உழைத்தால் மாத்திரமே சிரமங்களைத் தவிர்க்க முடியும். மேட ராசிக்காரர்களுக்கு இது  கண்டக சனிக்காலம். நம்பியிருந்தோர் ஏமாற்றுவார்கள், துரோகம் செய்வார்கள், குடும்பப் பிரவு ஏற்படலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு அட்டமச் சனி காலம். தொழில் வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் அவதானம் தேவை. எதுகும் பறிபோகலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு அட்டமச் சனியின் பாதிகாலம் அதாவது நான்கு வருடம். தடை, தாமதம், வீடு, நிலம், சொந்தம், சுகம் பறிபோகலாம். கவனமாக இருந்தால் தப்பிக்கலாம்.
சனிக் கிழமைகளில் சனீஸ்வரன், துர்க்கை அம்மன், காளி, விநாயகர் போன்ற தெய்வங்களை தொடர்ந்து வழிபட கெட்ட பலனின் சுமை அகலும். ஓன்று மாத்திரம் நிட்சயம் 21. 12.2011 தொடக்கமாக வரும் அடுத்த மூன்று வருடங்கள் கடும் மாற்றங்களைப் பலர் வாழ்வில் கொண்டு வரப்போகின்றன.
கணித்தவர் – காயத்திரி மைந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக