நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

கிரந்தம் தவிர் என்றால் வடமொழி கலப்பில்லாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதுவது.நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் வடமொழி சொற்களுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களை நினைவில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம்.
இது போன்ற நேரங்களில் கைகொடுக்கவே புல் வெளி உருவாகப்பட்டுள்ளது.கிரந்தம் கலந்த எந்த சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தேவையோ அந்த சொல்லை இந்த தளத்தில் சமர்பித்தால் அழகான தமிழ் சொற்களை இந்த தளம் பட்டியல் போட்டு தருகிறது.
உதாரணத்திற்கு ஷ் என்ற எழுத்தை டைப் செய்தால் கஷ்டத்திற்கு கடினம்,இஷ்டத்திற்கு விருப்பம்,புஷ்பத்திற்கு பூ,நஷ்டத்திற்கு இழப்பு,விஷ்ணுவுக்கு பெருமாள் என தமிழ் சொற்களாக அடையாளம் காட்டுகிறது.
அந்த வகையில் நல்ல தமிழ் சொற்களுக்கான தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.தமிழ் கூல் என்று கூட சொல்லலாம்.அது மட்டும் அல்ல ஒவ்வொரு முறையும் முகப்பு பக்க்த்தில் ஒவ்வொரு கிரந்த சொற்களும் அதற்கு பதிலான தமிழ் சொல்லும் தோன்றி கொண்டே இருக்கின்றன.
முற்றிலும் வடமொழி அல்லது ஆங்கில சொற்கள் கலப்பில்லாமல் எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த தளத்தை மனதார வரவேற்கிறேன்.இருந்தாலும் தமிழில் கலப்படம் களையப்பட வேண்டும் எனபதில் உடன்படுகிறேன்.தமிழ் மொழிக்கு உதவக்கூடிய இத்தகைய தளங்கள் இன்னும் பல தேவை.
இந்த தளத்தை அடையாளம் காட்டிய டிவிட்தமில்ஸ் தளத்திற்கும் எனது நன்றிகள்.
இணையதள முகவரி;http://www.pulveli.com/
http://twitamils.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக