ஈழத்தமிழரின்
தாயக நிலப்பரப்பான வடக்குகிழக்கில் முதலில் அமைக்கப்பட்ட நூலகம் என்ற
பெருமை திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்திற்கே சாரும். 177 வருடப்
பழைம கொண்ட திருகோணமலைப் பொது நூலகம் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ்
நூலகத்தை விட 100 ஆண்டுகள் பழமையானது. திருகோணமலையின் பெருமைகளில்
மிகமுக்கியமானது இது. அறிவை யாழப்பாணத்துக்கு மட்டும்
சொந்தமாக்குபவர்களில் காதுகளில் ஓங்கி கத்த வேண்டிய உண்மையிது.
திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் ( Trincomalee pettah library)என அழைக்கப்பட்ட இந்நூலகம் 1835ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1946ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இது பற்றி தகவல் திருகோணமலை நகராட்சி மன்ற பொன்விழா மலரில் படங்களுடன் உள்ளது.
இது பற்றிய மேலதிக தகவல் கலாநிதி.க.சரவணபவனின் "காலனித்துவ திருகோணமலை" நூலின் 223ம் பக்கத்தில் உள்ளது. இவ்வத்தியாயம் பிரித்தானிய நிர்வாக அறிக்கைச்சுருக்கத்தின் மொழிபெயர்ப்பாகும். அந்தத் தகவல் வருமாறு
"1835 : திருகோணமலையில் 2 நூலகங்கள் அமைக்கப்பட்டன. Liet.F.J.N. Ind. 37th Regiment நூலகத்தில் 17 பேர் அங்கத்தவர்களாக இருந்தார்கள். Trincomalee Pettah Library நூலகம் கடற்கரையோரமாகக் கட்டப்பட்டது. அது இன்றும் டொக்யாட் வீதியில் முற்றவெளியை அடுத்து காணப்படகின்றது. 34 சந்தாக்காரர்களைநிரந்தர உறுப்பினராக் கொண்டி
ருந்த இந்த நூலகத்தில் 500 புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நூலகத்தின் தலைவராக G.E.Colomb, செயலாளராக B.Crispeyn, பொருளாளராக J.A.Gibson, அறங்காவலர்களாக The Rev.S.O.Gilne, B.Crispeyn ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். துணை நூலகராக L.De.Smith நியமிக்கப்பட்டார்."
ஈழத்தமிழரின் அறிவின் சொத்து முதல் உரிமைக்குரிய இந்த நூலகம் பற்றிய தகவல் எந்த இணயத்திலும் கிடைக்காதது வேதனைக்குரியது. கடந்த 2010ம் ஆண்டு இந்நூலகம் அமைக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்த பவள விழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அப்போது இதுப்பற்றிய தகவல்கள் அறியாத நூலகர்களே நூலக ஆலோசனைக்குழுவோ அதை செய்யாமல் விட்டது அதைவிடப் பெரிய வேதனையாக இருக்கிறது.
இந்நூலகத்தில் 'திருகோணமலைப் படைப்புகள்' என்ற தனிப்பகுதியை தொடங்கி அதில் தன்னால் முடிந்தளவு ஆவனங்களை சேர்த்து இந்நூலக வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றிய நூலகர் திரு. செ.சிவபாதசுந்தரம் அவர்களுக்கு திருகோணமலைச் சமூகம் நன்றியுடையதாக இருக்க வேண்டும். ஈழத்தமிழ்த் தாயகத்தின் முதல் நூலகத்தோடு என் வாழ்வில் 2/3பங்கு கழிந்ததை நினைக்கும் போது எனக்கு நெஞ்சில் பெருமை குடிகொள்கிறது.
திருகோணமலை பொது நூலகத்தின் தற்போதைய தோற்றம்
www.Yarl.com

திருகோணமலை பொது நூலகத்தின் தற்போதைய தோற்றம்www.Yarl.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக