சனி, 24 டிசம்பர், 2011

தேசிய தலைவர் கடைசிவரை நம்பிய ஒரே ஈழத்து அரசியல் தலைவர். தனது இறப்புவரை மனதால் கூட தேசிய தலைவருக்கோ அவரது கொள்கைகளுக்கோ துரோகம் செய்யாத நல்ல மனம் படைத்த ஐயா மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு சுவிஸ் தமிழ் சங்கம் சார்பில் எமது வீர அஞ்சலிகள் இப்படிக்கு சிவ.அன்பழகன் (சுவிஸ் தமிழ் சங்கம்)



Posted Image


மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்! தமிழர் மனங்களில் இன்றும் அணையாமல் எரியும் ஒளிச்சுடர்: பா.உ யோகேஸ்வரன் நினைவு மீட்டல்.




எமது தமிழ்ச் சமூகம் தாயகத்தில் பலவித ஒடுக்கு முறையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நிந்திக்கப்பட்ட வேளையில், சிங்களத்தின் வாயிலிலும் சர்வதேச அரங்கிலும் எம் சமூகம் மீதான அநீதிகளை துணிகரமாக எடுத்தியம்பிய உரிமைக் குரலாக விளங்கியவர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என பா.உ. சீ.யோகேஸ்வரன் தனது இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழர் மனங்களில் இன்று வரைக்கும் அணையாத ஒளிச் சுடராக வாழ்ந்து வருபவர், வடக்கு கிழக்கே தமிழர்களின் வாழ்விடம் என்றும் இந்நிலப்பரப்பிலே தான் தமிழன் ஆள வேண்டும் என உடலில் இருந்து உயிர் பிரியும் வரை உறுதியாக இருந்த சிறந்த அரசியல் தலைமையை இன்று எம் சமூகம் இழந்துள்ளது என சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம் தான் வணக்கஸ்தலம் ஆனால் தனது ஆலயத்தின் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் தயவு தாட்சாண்யம் இன்றி சிங்களமும் அதன் எடுபிடிகளாக உள்ள தமிழ் துணை ஆயுதக் குழுக்களும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்தார்.
ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது கொலை தெடர்பாக அரசாங்கம் இன்று வரைக்கும் விசாரணை செய்து எதிரியை கைது செய்வதில் இழுத்தடிப்பும் கால தாமதமும் செய்து வருவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது.
எமது தரப்பில் பறிக்கப்பட்ட உயிர்கள், அநீதிகளுக்கு எல்லாம் விசாரணை என்கிற பதம் இன்று வரைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை உலகறிந்த உண்மை அது இன்று வரை தொடர் கதையாக உள்ளது.
எமது போராட்டத்தை திசைதிருப்புவதற்கு எம் சமூகத்தில் இருந்து எத்தனை உயிர்களை சிங்களம் பறிக்க நினைத்தாலும் எமது போராட்ட பாதையை எந்த ஒரு சக்தியாலும் மாற்றி விட முடியாது என்பதை எம்மை அழிக்க நினைத்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
இவரின் பிரிவால் இந்நிமிடம் வரை துயரப்பட்டுள்ள இவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் மறைந்த மாமனிதர் ஆத்மா சாந்தியடையவும் பிராத்திப்பதாகவும் இன்று வெளியிட்டுள்ள தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக